ETV Bharat / bharat

விலங்குநல ஆர்வலர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! - விலங்கு நல ஆர்வலர் சங்கீதா டோக்ரா

டெல்லி : உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு உணவுகள் முறையாக வழங்க அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரிய பொது நலன் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

SC refuses to intervene in PIL seeking food supply in zoos
விலங்குநல ஆர்வலர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
author img

By

Published : Apr 22, 2020, 12:38 PM IST

விலங்கு நல ஆர்வலர் சங்கீதா டோக்ரா என்பவர் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள் பராமரிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதுமுள்ள உயிரியல் பூங்காக்களில் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு உணவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை. எனவே, இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை பராமரிக்க அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 காரணமாக மனிதர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளும் உள்ளன என்பதும் உண்மை தான்.

SC refuses to intervene in PIL seeking food supply in zoos
விலங்குநல ஆர்வலர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

இது குறித்து நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நாடு முழுவதுமுள்ள உயிரியல் பூங்காக்களில் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு பிரச்னைகள் இருந்தால், அரசாங்கங்கள் விலங்குகளை கவனித்துக்கொள்ளும்” என கூறினார்.

இந்த வழக்கின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க : கரோனா பீதி: இறந்தவரின் உடலை எடுக்க மறுத்த கிராம மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.