லண்டலின் சொகுசு வீடு வாங்கியதில் பண பறிமாற்றத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா மீதும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா மீதும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்திவருகிறது.
தன் மீது பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரியும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு எதிராக இடைக்கால பிணை வழங்கவும் கோரி அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவானது, நீதிபதி ஹீமா கோலி மற்றும் வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கெனவே டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இதில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறி ராபர்ட் வதோராவுக்கும் அவரது உதவியாளர் மனோஜ் அரோராவுக்கும் இடைக்கால பிணை வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.