கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை கருத்தில்கொண்டு புனே மற்றும் நாசிக் பகுதிகளில் மதுபானங்களை வீடு வீடாக விற்பனை செய்ய அனுமதிக்குமாறு மகாராஷ்டிர மதுபானக்கடை உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எங்களுக்கு இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை. மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா வீடு வீடாக சென்று விநியோகம் செய்ய என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதற்கு தங்களால் எவ்வித அவசர சட்டத்தையும் பிறப்பிக்க இயலாது என வழக்கை நிராகரித்து உத்தரவிட்டனர்.