தெஹல்கா பத்திரிகை நிறுவனர் தருண் தேஜ்பால். இவர், 2013ஆம் ஆண்டு கோவா நட்சத்திர விடுதி ஒன்றில் தன்னுடன் கீழே பணியாற்றிவந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2013 நவம்பர் 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவரை குற்றவாளி என 2017 டிசம்பர் மாதம் தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தருண் தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பாக இன்று விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், பாலியல் குற்றச்சாட்டை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து தருண் தேஜ்பாலின் மனுவை நிராகரித்துள்ளது.
மேலும், இந்த வழக்கின் விசாரணை ஆறு மாதத்துக்குள் முடிவடையும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.