மகாராஷ்டிரா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் உண்மைத்தன்மை குறைவாக உள்ளதென சாத்தாரா மாவட்ட ஆட்சியர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் சில நடைமுறைகளை நெறிப்படுத்தவேண்டும் எனக் கூறியுள்ளது.
மேலும் 2011ஆம் ஆண்டு ஜீலை 30ஆம் தேதியிலிருந்து, 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களை சரிபார்க்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள ஆய்வுக் குழுக்களை பரிந்துரைத்துள்ளது. மேலும், சான்றிதழ்களை முறையாக சரிபார்க்கவும், மக்களின் அடையாளங்களில் அரசு அதிகாரிகள் மாற்றம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று எனவும் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: 'சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராத மருத்துவ மாணவன்' - நடந்தது என்ன?