ETV Bharat / bharat

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு; வெளிநாடு செல்ல ராஜீவ் சக்சேனாவுக்கு அனுமதி - கிறிஸ்டியன் மிசேல்

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சரணடைந்த ராஜீவ் சக்சேனாவுக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

sc
author img

By

Published : Jun 26, 2019, 3:54 PM IST

Updated : Jun 26, 2019, 4:18 PM IST

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தயாரித்த 12 ஹெலிகாப்டர்களை குடியரசு தலைவர், பிரதமர் போன்ற வி.வி.ஐ.பிகளுக்கு வாங்க முடிவு செய்து, 2010ஆம் ஆண்டு 3600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் புரூனோ ஸ்பாக்நோலினி (BRUNO SPAGNOLINI), இந்த ஒப்பந்தத்தினை உறுதிசெய்ய லஞ்சம் கொடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு கைவிட்டது. ஆனால் இதில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனிய காந்தி ஆகியோரின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மிசேல் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு அப்ரூவராக மாறிய ராஜீவ் சக்சேனாவுக்கு, மருத்துவ அடிப்படையில் வெளிநாடுச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால் ராஜீவ் சக்சேனாவின் உறவினர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் ஐந்து கோடி ரூபாய் வரை உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றமும் இவர் வெளிநாடுச் செல்ல அனுமதித்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 26, 2019, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.