டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், 'மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளபடி ஒரு மாத காலத்துக்கு மாணவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் வாடகை வசூலிக்கக் கூடாது. இதனை மத்திய அரசாங்கம் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவானது நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மனுவை வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலமாக விசாரித்தனர். அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தால், அரசாங்கத்தின் உத்தரவுகளை செயல்படுத்துங்கள் என்று கூற முடியாது என்று கூறினார்கள்.
மேலும் இதுபோன்ற மனுக்களை கடின காலங்களில் தாக்கல் செய்ய முடியாது என்று நீதிபதி எஸ்.கே. கவுல் கூறினார். மேலும், 'ஏற்கெனவே இதுபோன்ற மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீங்கள் எப்படி மாணவர்களின் பிரதிநிதி போல் செயல்பட முடியும். மேலும் மாணவர்களின் நிதியை வழங்குவதற்கான வழிகாட்டுதலுக்காக நீங்கள் எவ்வாறு நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்? நாளை நீங்கள் வேறு சில நிதியையும் கேட்கலாம்' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பான உதவி எண்கள் குறித்து அறிவீர்களா? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், மனுதாரருக்கு சில சலுகைகளையும் அளித்தனர். அதன்படி மனுதாரர் இந்த மனுவை வாபஸ் பெறவும், அரசாங்கத்தின் முன் பிரதிநிதித்துவம் செய்யவும் முடியும். அதாவது இந்த விவகாரத்தை உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், இதர அரசு பிரதிநிதிகள் ஆகியோரிடம் வற்புறுத்தலாம்.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களைக் கட்டணமின்றி அழைத்து செல்லக் கோரிய மனு தள்ளுபடி