டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 மக்களவை தேர்தலில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த வெற்றிக்கு எதிராக சரிதா நாயர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை (நவ.2) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, அற்பமான காரணத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.
சோலார் பேனல் வழக்கில் சரிதா நாயர் அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயம்புத்தூர் நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்தாண்டு தண்டிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். சோலார் பேனல் ஊழல் வழக்கில், தமிழ்நாடு, கேரள பொதுமக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: “ராணுவ வீரர்களை மோடி அவமதித்து விட்டார்”- ராகுல்காந்தி