கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
டி.கே. சிவக்குமார் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை சில மாதங்களுக்கு முன் விசாரணை நடத்தியது. பின்னர் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை பிணை கோரி நீதிமன்றத்தை நாடியும் அம்மனுக்களை நீதிபதிகள் நிராகரித்துவந்தனர்.
பழி தீர்க்கும் பாஜக - டி.கே.சிவக்குமார் கைதுக்கு ராகுல் கண்டனம்!
இதனையடுத்து 51 நாள்கள் சிறையிலிருந்த அவருக்கு அக்டோபர் மாதம் நீதிமன்றம் பிணை வழங்கியது. அதன் பிறகு ஓய்விலிருந்த அவருக்கு நவம்பர் 11ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சூழலில் சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.