புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக, ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-உதம்பூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுமக்களுக்கான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் சிரமமின்றி செல்ல ஏதுவாக இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை அம்மாநில மக்களை கடுமையாக பாதித்தது. எதிர்க்கட்சிகள் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
மே 2ஆம் தேதி இதில், பாரமுல்லா-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஸ்ரீநகர்-உதம்பூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான தடை உத்தரவு இன்னும் அமலில் உள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுமக்களுக்கான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.