ETV Bharat / bharat

மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

டெல்லி: நான்கு கர்நாடக மூத்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு தெரிவித்த ஆட்சேபனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததுள்ளது.

author img

By

Published : Oct 6, 2019, 10:24 PM IST

SC Collegium

Latest National News சமீபத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றிவரும் சவானூர் விஸ்வாஜித் ஷெட்டி, மராலூர் இந்திரகுமார் அருண், முகமது கவுஸ் சுகுரே கமல், சீதாராமையா இந்திரேஷ் ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிதித்துறை அமைச்சகம், "சவானூர் விஸ்வாஜித் ஷெட்டிக்கு நிழலுலக தாதாக்களுடன் தொடர்புள்ளதாகவும், மராலூர் இந்திரகுமார் அருண் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார்கள் உள்ளதால் அவர்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தது.

மேலும், முகமது கவுஸ் சுகுரே கமலுக்கு உயர் நீதிமன்றத்தில் போதிய அனுபவம் இல்லை, சீதாராமையா இந்திரேஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்துவதால் இவர்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், "நிழலுக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதற்கோ, ஊழலில் ஈடுபட்டதற்கோ போதுமான ஆதாரங்கள் இல்லை. மேலும் நுண்ணறிவு பிரிவும் அவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்கிறது. இவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக போதுமான தகுதிகளைப் பெற்றுள்ளனர்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பயிற்சி விமானம் விபத்து - இருவர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.