உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில் பிப்ரவரி 12ஆம் தேதி கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கும், கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ரவி விஜயகுமார் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்துக்கும், பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் வி மோரே ( Ranjit V More) மேகாலயா நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்ய பரித்துரைக்கப்பட்டது.
இதையும் படிங்க : சென்னை உயர்நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் நிரந்தரம் : கொலிஜியம் ஒப்புதல்