கரோனா அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில், ஏர் இந்தியா விமானி, தேவன் கனானி என்பவர் விமான நிறுவனத்திற்கு எதிராக மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு பயணிகளை அழைத்து வந்தபோது, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், விமானத்தின் நடு இருக்கையை காலியாக வைத்திருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தும், ஏர் இந்தியா அந்த விதிகளைப் பின்பற்றவில்லை. இந்த விதிமீறல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஏர் இந்தியா நிறுவனமும், மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதுதொடர்பாக மத்திய அரசும், ஏர் இந்தியா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினை அவசர வழக்காக கருத்தில் கொண்டு, ரமலான் விடுமுறை நாளில் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விசாரணை செய்தார்.
குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, செயல்படுவதே அரசின் பணி. வணிக நோக்கில் செயல்படுவது அல்ல என்ற தலைமை நீதிபதி,
அடுத்த பத்து நாள்களுக்குத் திட்டமிடப்படாத சர்வதேச விமானங்களில் (சிறப்பு விமானங்கள்) நடு இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிகளை அழைத்து வரலாம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வந்தே பாரத் திட்டம் : மீண்டும் சேவையை தொடங்குகிறதா ஜெட் ஏர்வேஸ்?