சர்தார் வல்லபாய் பட்டேலின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முன்னதாக காவல்துறை, என்.சி.சி மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல் அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். அடுத்து தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி முதலமைச்சர் வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
தேசிய ஒற்றுமை ஓட்டத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 500-கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தில் பங்கேற்றனர்.
இதேபோல் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை வளாகத்தில் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை...!