ETV Bharat / bharat

பாஜகவில் இணைகிறாரா நடிகர் சஞ்சய் தத்?

நாக்பூர்: பாலிவுட் முன்னணி நடிகரான சஞ்சய் தத் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரியை சந்தித்துள்ளார்.

சஞ்சய் தத்
author img

By

Published : Sep 16, 2019, 6:02 PM IST

மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரியை பாலிவுட் முன்னணி நடிகரான சஞ்சய் தத் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியிடாததால், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் சஞ்சய் தத் தமது கட்சியில் இணையவுள்ளதாக ராஷ்ட்ரிய சமஜ் பக்‌ஷா தலைவரும், விலங்குகள் நலத்துறை அமைச்சருமான மகாதேவ் ஜங்கர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் நிதின் கட்கரி - சஞ்சய் தத்
அமைச்சர் நிதின் கட்கரி - சஞ்சய் தத்

இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரியை சந்தித்துள்ளதால், பாஜகவில் இணைவார் எனக் கூறப்படுகிறது. மேலும், சஞ்சய் தத்-ன் தந்தையான சுனில் தத் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அமைச்சராகவும், அவரது சகோதரி நார்கிஸ் தத் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளதால், நடிகர் சஞ்சய் தத் தனது அரசியல் குறித்த தகவலை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் 1993ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Intro:संजय दत्त नि घेतली केंद्रीय मंत्री नितीन गडकरीची भेटBody:टीप-ही बातमी धनंजय टिपले नि पाठवली आहे त्या बातमी चे फोटो पाठविले आहेत. कृपया फोटो वापरावेConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.