புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக கொறடாவுமான வையாபுரி மணிகண்டன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க அவர்களுக்கு தேவையான மளிகை, காய்கறி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்கள், காவல் துறையினர், சுகாதாரத் துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு நாள்தோறும் இவரது சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவை வளாகத்தில் சட்டசபை காவலர்கள், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பாதுகாப்பு வீரர்கள், சட்டசபை பாரதி பூங்காவை நாள்தோறும் சுத்தப்படுத்தும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முகக்கவசம், சானிடைசர் அடங்கிய பை உள்ளிட்டவைகளை வையாபுரி மணிகண்டன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், "கரோனாவை ஒன்றுபட்டு விரட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள களப்பணியாளர்கள், தங்கள் உடல் நலனையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தருமபுரியில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி - அமைச்சர் கே.பி. அன்பழகன்