கிறிஸ்தவர்களின் நாற்பது நாட்கள் தவக்காலத்தின் முக்கிய நாளாக புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இயேசு கிறிஸ்துவின் மரணப்பாடுகளையும், அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் நினைவுக்கூறும் நாளாகவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்நிலையில், புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு ஒரிசாவின் பூரி கடற்கரையில் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் புனித வெள்ளி குறித்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.