ETV Bharat / bharat

பூட்டானிடம் தூதரக உறவுகளை ஏற்படுத்த சீனா முயற்சி - தென் சீன கடல்

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் எல்லையிலுள்ள கிழக்கு பூட்டானில் உள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்திற்கு உரிமை கோருவதற்கான சீனாவின் புதிய விரிவாக்க முயற்சி, திம்புவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தவும், இந்தியாவிற்கும் இமயமலையை ஒட்டியுள்ள அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு சோதனை ஏற்படுத்தவும் எடுக்கப்படும் பெய்ஜிங்கின் முயற்சி என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

சீனா
சீனா
author img

By

Published : Jul 24, 2020, 8:07 AM IST

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், சிறிய தெற்காசிய தேசத்துடனான தனது எல்லை மோதல்களைத் தீர்ப்பதற்கு சீனா ஒரு தொகுப்பு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது என்று கூறினார்.

சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது. சீனாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை, மேலும் எல்லையின் நடுத்தர, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் சர்ச்சைக்குரியவை என்றும் வாங் கூறினார்.

இந்த மோதல்களுக்கு சீனா ஒரு தீர்வை முன்மொழிந்துள்ளது. பலதரப்பட்ட மன்றங்களில் இதுபோன்ற விவகாரங்களை எழுப்புவதை சீனா எதிர்க்கிறது, மேலும் இந்த பிரச்னை தொடர்பாக சீனா சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளது என்று மேலும் அவர் கூறினார்.

சர்வதேச நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு தேசிய நிலையான வளர்ச்சி முயற்சிகளுக்கு 183 நாடுகளை ஒன்றிணைக்கும் நிதியமான உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தை அபிவிருத்தி செய்வதற்கான சீனாவின் ஆட்சேபனைகள் குறித்த கேள்விகளுக்கு வாங்கின் பதிலளித்தார்.

சீனா தனது சர்வதேச எல்லைக்கு கூட பொருந்தாத மற்றும் இந்தியா-பூட்டான் எல்லையில் இருக்கும் ஒரு பகுதிக்கு உரிமை கோருகிறது என்பது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

45 ஆண்டுகளில் 3,488 கி.மீ தூர உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரண்டு பெரிய ஆசிய நாடுகளுக்கு இடையேயான முதல் நிகழ்வாக கடந்த மாதம் லடாக் பகுதியில் நடந்த ரத்தக்களரி எல்லை மோதலைத் தொடர்ந்து இந்தியாவும் சீனாவும் பதற்றங்களை குறைப்பது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தாலும், இது இரு தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது,

கிழக்கு பூட்டானில் உள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் எல்லையாக உள்ளது, இது "தெற்கு திபெத்" என்று அழைக்கப்படும் பகுதி என்று சீனா கூறுகிறது.

பூட்டானுக்கும் சீனாவுக்கும் அதிகாரபூர்வ தூதரக உறவுகள் இல்லை. 1951ஆம் ஆண்டில் பெய்ஜிங் திபெத்தை இணைத்ததைத் தொடர்ந்து சீனாவும் பூட்டானும் அண்டை நாடுகளாக மாறிய பின்னர், இரு நாடுகளும் எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக 1984 முதல் 24 சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்தியாவும் பூட்டானும் உறுதியான ராஜாங்க உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் அதே சமயம் திம்புவின் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய கூட்டாளியாக புதுடெல்லி இருக்கிறது. பூட்டானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியும் இந்தியா தான்.

பூட்டான் பற்றிய பெய்ஜிங்கின் சமீபத்திய கூற்று, இந்தியா மற்றும் சீன துருப்புக்கள் டோக்லாம் பிராந்தியத்தில் இந்தியா-பூட்டான்-சீனா சர்வதேச மும்முனையில் 2017-ல் பதற்றமான 73 நாள் மோதலில் ஈடுபட்டதை அடுத்து எழுந்துள்ளது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அங்கு ஒரு சாலையை அமைக்க முயன்று வருகிறது. டோக்லாம் சம்பவத்தைத் தொடர்ந்து, பூட்டான் சீனாவுடனான எல்லைப் பிரச்னைகள் குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் இந்தியாவுக்கு ஆதரவாக நின்றது.

சீனா இப்போது பூட்டானுக்கு அளித்து வரும் தொகுப்பு ஒப்பந்தம், திம்புவை தன்னுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்துவதற்கு வற்புறுத்துவதற்கும், பின்னர் டோக்லாம் பகுதியை கோருவதற்கு மேற்கொள்ளப்படும் பெய்ஜிங்கின் முயற்சியாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மத்திய மற்றும் கிழக்கு பூட்டானில் சீனா தனது உரிமைகளைத் விட்டுக்கொடுத்து பின்னர் டோக்லாம் மீது தனது உரிமையை நிலைநாட்ட வாய்ப்புள்ளது என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி முனி, ஈடிவி பாரத்-திடம் கூறினார்.

"பூட்டானின் மேற்கில் உள்ள டோக்லாம் மீது உரிமை கோர சீனா விரும்புகிறது, ஏனெனில் இது முக்கியமான சும்பி பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ளது" என்று முனி கூறினார்.

இது இந்தியாவுக்கு கவலை தரக்கூடியது. ஏனென்றால் சீனாவின் உயரமான இமயமலைக்கு தெற்கே இந்திய மாநிலமான சிக்கிம் மற்றும் பூட்டானுக்கு இடையே உள்ள சும்பி பள்ளத்தாக்கு, வடகிழக்கு இந்தியாவை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் “கோழியின் கழுத்து” என்று அழைக்கப்படும் இந்தியாவின் சிலிகுரி வழித்தடத்தை நோக்கி ஐந்து கி.மீ தூரத்தில் ஒரு கத்தி போல் இருக்கிறது

அவர்களின் (சீனாவின்) திட்டம் பூட்டானை தங்களுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்த அழுத்தம் கொடுத்து, திம்புவுடனான இந்தியாவின் உறவுகளுக்கு சோதனை கொடுப்பதாகும் என்று முனி கூறினார். சீனாவுடன் தூதரக உறவுகள் இல்லாத ஒரே தெற்காசிய நாடு பூட்டான்.

அதே நேரத்தில், பூட்டானியர்கள் சீனாவுடனான அதன் எல்லை மோதல்களைத் தீர்க்க முனைவார்கள், ஆனால் இந்தியா-சீனா மோதலுக்கு இடையில் வர விரும்ப மாட்டார்கள் என்று முனி கூறினார்.

முனியின் பார்வையை பிரதிபலிக்கும் வகையில், டிப்ளமோட் ரிஸ்க் இன்டலிஜென்ஸின் ஆராய்ச்சி இயக்குநர் அங்கித் பாண்டா கூறுகையில், இந்த உரிமைகோரலை 10 விழுக்காட்டிற்கும் அதிகமான இறையாண்மையை பூட்டானிய பிரதேசத்திற்கு தருவதற்கான சீனாவின் நோக்கம் திம்புவை மற்ற பகுதிகளில், முக்கியமாக டோக்லாம், பெய்ஜிங்கிற்கு சாதகமான சலுகைகளை வழங்க கட்டாயப்படுத்துவதற்கு என்று கருதப்படுகிறது.

இந்தியாவுடனான எல்லை, தென் சீனக் கடல் மற்றும் ஜப்பானின் எல்லையில் உள்ள கிழக்கு சீனக் கடலில் உள்ள செங்காகு தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் அதன் விரிவாக்க கொள்கைகளில் சமீபத்தியது பூட்டான் பிரதேசத்தின் மீதான சீனாவின் கூற்று.

உலக சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, பெய்ஜிங்கின் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருந்தாலும், முனியின் கூற்றுப்படி, பூட்டான் சீனாவுடனான தனது சமீபத்திய பிரச்னையை மற்றவர்களின் தலையீடு இல்லாமல் தீர்ப்பதை இந்தியா விரும்புகிறது.

இதையும் படிங்க: இந்திய-சீன எல்லை விவகாரம்: நாளை பேச்சுவார்த்தை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.