கரோனா தொற்று பரவலால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு நட்பு நாடுகளுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது.
அதன்படி, மிஷன் சாகர் இரண்டாம் திட்டத்தின் கீழ் இந்திய போர்க் கப்பலான ஐராவத், எரித்ரியா நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் உணவு பொருள்களை கொண்டு சென்றது. இந்த கப்பல், இன்று (நவ.6) எரித்ரியாவின் மாசாவா துறைமுகத்தைச் சென்றடைந்தது.
இதேபோன்று கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மிஷன் சாகர் ஒன்றாம் திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து மொரிஷியஸ், மடகாஸ்கர், மாலத்தீவுகள் மற்றும் கோமோரோ உள்ளிட்ட நாடுகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாபா கா தாபா பெயரில் பண மோசடி செய்த யூடியூபர் மீது வழக்கு பதிவு