மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயன்றுவருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. எம்எல்ஏக்களை தனது பக்கம் இழக்க பாஜக சார்பில் பணம் கொடுக்கப்படுவதாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சச்சினுக்கு ஆதரவாக 30 எல்எல்ஏக்கள் இருப்பதாகவும் அவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே, ராகுல் காந்தி, சோனியா ஆகியோரை சந்திக்க சச்சின் டெல்லி சென்றார். ராகுலை அவர் சந்தித்தாகவும், சோனியாவுடன் சந்திப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆட்சி கவிழ்ப்பை தவிர்க்கும் நோக்கில், காங்கிரஸ் உயர் மட்டம், மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை ஜெய்ப்பூருக்கு அனுப்பியுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கெலாட் வீட்டில் நடைபெற்றுவரும் நிலையில் அதில் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை , நாளை நடைபெறவுள்ள மற்றொரு கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது எனவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "சுயேச்சை உள்பட 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது. நாளை நடைபெறவுள்ள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை. கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனிக்கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்?