கேரளாவின் சபரிமலை கோயில் உட்பட பல்வேறு வழிபாட்டு மத தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான வழக்குகளின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நேற்று (பிப். 17) தொடங்கியது.
இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல். நாகேஸ்வர ராவ், எம்.எம். சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் மற்றும் சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.
இந்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஏழு கேள்விகளை வடிவமைத்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் துஷார் மேத்தா, ஒரு மதத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அது குறித்து பரப்புரை மேற்கொள்ளவும் அடிப்படை உரிமை உள்ளது.
சட்டம் ஒழுங்கு, அறநெறி தொடர்பாக மத்திய அரசு சட்டத்தை உருவாக்க முடியும்” என்று வாதிட்டார். இது தொடர்பாக தெளிவுப்படுத்திய நீதிபதிகள், “மறுஆய்வு மனுவை தீர்மானிக்க மாட்டோம். ஆனால் மத சுதந்திரம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25ன் படி பொதுவிதிகளை வகுப்போம்” என்றனர்.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
இதையும் படிங்க: 'சபரிமலைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது' - திருப்தி தேசாய்