கரோனாவுக்கு ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அப்போது தடுப்பு மருந்தின் பாதுகாப்புதன்மை செயல்திறன் ஆகியவை குறித்து பல்வேறு நாடுகளும் கேள்வி எழுப்பின.
மருத்து சோதனையின் முதல்கட்ட முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தக் கேள்விகள் ஓரளவு குறைந்தன. மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஸ்புடனிக் வி தடுப்பு மருந்து சோதனைகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பு மருந்து ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள பேனேசியா நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் இரு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இறுதியில் பேனேசியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
பேனேசியா நிறுவனத்தில் தனியாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு இல்லை. எனவே இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களின் மருந்துகளை உற்பத்தி மட்டுமே செய்யும்.
ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்க தேவையான தொழில்நுட்பம் பேனேசியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது குறித்த கூடுதல் தகவல்களை தர மறுத்த நிறுவனத்தின் தெழிற்சாலை பிரிவின் தலைவர் ராஜேஷ் சோப்ரா, பிரதமர் அலுவலகத்திற்கும் மத்திய அரசுக்கும் மட்டுமே இது குறித்த தகவல்களை அளிக்க அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’அதானிக்குக் கடன் வழங்கினால், எஸ்பிஐ பசுமைப் பத்திரங்களை விற்போம்’ - பிரான்ஸ் நிறுவனம்