மாநிலங்களவை இன்று கூடியதில் இருந்தே எதிர்க்கட்சியினர் பல்வேறு காரணங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக கர்நாடகாவில் நடக்கும் அரசியல் குழப்பம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.