மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவிலுள்ள வாட்கஞ் என்னும் பகுதியில் போதைப்பொருள் கடத்துவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில், காரினுள்ளே மறைத்துவைக்கப்பட்டிருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு கிலோ ஹெராயின் என்னும் போதைப்பொருளை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
பின்னர், கார் ஓட்டுநர் உள்ளிட்ட இருவரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.