ETV Bharat / bharat

"20 லட்சம் கோடி ரூபாய் கரோனா பேக்கஜ்" பொருளாதாரத்தை மீட்க மிகவும் உதவும்- கடிதத்தில் மோடி உருக்கம்! - Rs 20 lakh crore package

டெல்லி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் கரோனா பேக்கஜ் திட்டம் பொருளாதாரத்தை மீட்க மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்

India Atamnirbhar Modi
India Atamnirbhar Modi
author img

By

Published : May 31, 2020, 12:32 AM IST

மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக விளங்கி கரோனாவை கையாண்டதை உலகை வியக்கவைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் கரோனா பேக்கஜ் இந்திய பொருளாதாரத்தை சரிசெய்ய மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த பேக்கஜ் திட்டத்தில் வெளிவந்த அறிவிப்பால் சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், பெரிய தொழில்நிறுவனங்கள் என அனைத்தும் புத்துயிர் பெரும் என நம்புகிறேன்.

மேலும் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராம புறங்களில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியது உள்ளிட்ட கடந்த ஓராண்டு சாதனைகள் சிலவற்றை பட்டியலிட்டுள்ள மோடி, தனது அரசின் சாதனையை கூற இந்த கடிதம் போதாது எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மக்களின் பாசத்தால் புது உற்சாகம் கிடைக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லாக்டவுன் 5.0 விதிமுறைகள் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.