கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் வரிசியூர் துணை கருவூலம் உள்ளது. இந்தக் கருவூலத்தின் மாவட்ட ஆட்சியர் வங்கிக் கணக்கிலிருந்து பண மோசடி நடந்துள்ளதாக நிதித்துறை அலுவலர்களுக்கு புகார் கிடைத்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மாவட்ட ஆட்சியரின் வங்கிக்கணக்கிலிருந்து சுமார் இருந்து 2 கோடிக்கு மேல் மோசடி நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அக்கருவூலத்தின் மூத்த கணக்காளர் ஒருவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கருவூலத்தின் ஓய்வு பெற்ற அலுவலரின் பயன்பாட்டாளர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றை வைத்துக் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
பொதுவாக ஒரு அலுவலர் ஓய்வு பெற்றால் அவ்வங்கியின் கடவுச் சொல் மாற்றப்படும். ஆனால் இம்முறை மாற்றப்படாது, வேண்டுமென்றே திட்டமிடப்பட்டுக் கொள்ளையடிக்க வழிவகை செய்தது போல் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் விஷால், பெண் ஊழியர் மீது மோசடி புகார்!