உத்திரப்பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வத்ரா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நாடெங்கும் பயணித்து வாக்கு சேகரிக்கவுள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக ராகுல் போட்டியிடும் அமேதியிலும், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதியும், சோனியா காந்தி ஏப்ரல் 11ஆம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடதக்கது.