ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் யர்ராகுண்ட்லாவிலிருந்து மத நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகச் சாலையில் ஓரத்தில் 40 கிறிஸ்தவர் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அந்தச் சாலையில் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடந்துசென்றவர்கள் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
தற்போது இருவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி நிக்காமல் சென்றுள்ளது. அதனைப்பார்த்த மக்கள் லாரியைப் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளனர். தற்போது இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!