ETV Bharat / bharat

அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு: இறுதிச்சடங்கு செய்வதில் திணறும் இந்தியா! - இறுதி சடங்கு செய்வதில் நெருக்கடி

டெல்லி: அதிகரித்துவரும் கரோனா உயிரிழப்புகளால், இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு: இறுதி சடங்கில் திணறும் இந்தியா!

author img

By

Published : Jul 29, 2020, 4:13 AM IST

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், நாட்டில் இதுவரை 33 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 14 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் கரோனாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இறுதிச்சடங்கிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அல்லல்படுகின்றனர். அதுமட்டுமின்றி கரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் வழிமுறைகளையும் அலுவலர்கள் குழப்பிவருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இறுதிச்சடங்கை செய்வதில் மாநிலங்கள் செய்துள்ள முன்னேற்பாடுகள் என்னென்ன?

டெல்லி: தலைநகரான டெல்லியில் 13 தகன மயானங்கள், நான்கு கல்லறை தோட்டங்கள் ஆகியவை கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம்செய்ய தயார் நிலையில் உள்ளன. இவற்றில் ஆறு தகன மயானங்கள், நான்கு புதைக்குழிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபர்களைப் புதைக்க ஒதுக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா: கரோனா தொற்று உயிரிழப்பில் நாட்டில் முதல் இடத்தில் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில், 49 மாநகராட்சி தகன மையங்களும் 20 தனியார் தகன மையங்களும் உள்ளன.

மேற்கு வங்கம்: கரோனாவால் உயிரிழந்தவர்களைத் தகனம் செய்ய இரண்டு கூடுதல் மின்சார தகன மையம் உருவாக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா: கரோனாவால் உயிரிழந்தவர்களைத் தகனம் செய்வதற்கான கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தகன மையங்களின் திறப்பு நேரமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மரபுகளைத் தோற்கடித்த கரோனா:

கரோனா தொற்றால் காலம்காலமாக மக்கள் பின்பற்றிவந்த இறுதிச்சடங்கு மரபை மக்களால் தற்போது பின்பற்ற முடியவில்லை. இருப்பினும், அரசு சார்பில் பாராம்பரிய முறையில் அந்தந்த மதத்தவர்களை அடக்கம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பெருந்தொற்று காலத்தில் அடக்கத்தில் ஏற்படும் சிக்கல்கள்:

  • கல்லறை தோட்டங்கள், தகன மையங்களில் உள்ள ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.
  • பயத்தினால் அதிகரிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை
  • குறைவான போக்குவரத்து வசதிகள்
  • அடக்கம், தகனம் செய்வதற்கு மேற்பார்வை இல்லாமை
  • முறையான பாதுகாப்பின்றி உயிரிழந்தவரின் உறவினர்களும் இறுதிச்சடங்கிற்கு வருதல்

இதையும் படிங்க...ஆக்ஸிஜன் அளவை கணக்கிடுவது உயிர்களை காக்கும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.