புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்துள்ள காக்காயந்தோப்பை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (74). இவர், புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர்.
இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். இதையறிந்த சுப்பிரமணியன், கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த அவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து தகவல் அறிந்த புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.