ETV Bharat / bharat

வாக்குறுதிகளை நிறைவேற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம் - கே. டி. ராமாராவ் பெருமிதம்! - தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி

தெலங்கானா: முந்தைய தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் உள்ளாட்சித் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் செயல் தலைவர் கே. டி. ராமாராவ் தானே கட்சியை முழுமையாக ஏற்று நடத்தி வருவதாக பரவும் செய்தி ஊகங்களின் அடிப்படையிலானது என்று மறுத்துள்ளார்.

கே. டி. ராமாராவ்
கே. டி. ராமாராவ்
author img

By

Published : Jan 25, 2020, 6:37 PM IST

தெலங்கானாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அரசு, அம்மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தி மேம்படுத்தியதாலேயே இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான கே. டி. ராமாராவ் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்திலுள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, ஈ டிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், ”முந்தைய தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் உள்ளாட்சித் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கே. டி. ராமாராவ் ஈ டிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணல்

ஏற்கனவே தனது தந்தையும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவினால் வாரிசு அரசியல் பிம்பம் தன் மீது கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியைத் தானே முழுமையாக ஏற்று நடத்தி வருவதாக பரவும் செய்தி ஊகங்களின் அடிப்படையிலானது எனவும் அவர் மறுத்துள்ளார்.

புதிய நகராட்சி சட்டம் குறித்து பேசுகையில், மக்களின் தேவைகளை இச்சட்டம் மேலும் எளிமையாக்கும் எனவும், குடிமக்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் நகராட்சி இயங்க வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தெலங்கானா, உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை மீது காங்கிரஸ் அதிருப்தி

Intro:Body:

KTR

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.