புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள காந்தி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது, புதுச்சேரி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிகள், அவர்களுடன் தொடர்புடைய 18 பேரை விடுதலைச் செய்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகள் ஒருபோதும் தண்டனையில் இருந்த தப்பிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சிறார் நீதி ஆணையத்தில் உள்ள வழக்குகளை முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.