புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.Ted) மாணவர்களுக்கு தேர்வு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கியது.
புதுச்சேரி வள்ளலார் அரசு பள்ளி, வெங்கடசுப்பா ரெட்டியார் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான பயிற்சி மாணவர்கள் தேர்வு எழுதினர்.
கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற தேர்வின்போது புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதி கோரினர். ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 23) ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் தமிழ்மொழி பாடத்திற்கான தேர்வு எழுத மையங்களில் வந்திருந்தனர். வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் வந்திருந்த மாணவர்கள் அப்போது திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்குப் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்காமல் பாராபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி தேர்வு மைய வளாகத்தில் 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் தர்ணாவில் அமர்ந்து கோரிக்கையினை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் மாணவர்கள் தேர்வு மையங்களில் சென்று தேர்வு எழுதினர்.
பாடப்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத கோரிக்கை: ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் போராட்டம் - ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள்
புதுச்சேரி: பாடப்புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி தேர்வு மைய வாயிற்பகுதியில் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.