குடியரசு தின கொண்டாட்டங்கள் காரணமாக ஜனவரி 18, 20, 24, 26 ஆகிய நாள்களில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள்வரை எந்த விமான நடவடிக்கைகளும் நடைபெறாது என்று ஞாயிற்றுக்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) வெளியிட்டுள்ள ஏர்மேன் (நோட்டாம்) அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வருகிற 18, 20 ஆகிய தேதிகளில் காலை 10.35 மணிமுதல் மதியம் 12.15 மணிவரை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 'தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும்' விமானங்கள் அனுமதிக்கப்படாது.
அதேபோல் 24, 26 ஆகிய தினங்களில் 'குடியரசு தின கொண்டாட்டங்கள்' காரணமாக, டெல்லி வான்வழி மூடப்படுகிறது. இதனால் விமானங்கள் பறக்க அனுமதியில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் விமானங்கள் பறப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் டெல்லி வழியாக அனைத்து விமான நிறுவனங்களின் விமான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 'என்ஆர்சி குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை' - வெங்கையா நாயுடு