ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலராக ஷிபாசிஷ் சர்க்கார் உள்ளார். இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷிபாசிஷ் சர்க்காருக்கு நேற்று (மே 30) காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ரிலையன்ஸ் குழுமம் வெளியிடவில்லை.
இந்தியாவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 186ஆக உள்ளது. அதிகப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 ஆயிரத்து 168 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இரண்டாயிரத்து 197 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:ஊழியர்கள் மலிவான பகுதியில் குடியேறினால் ஊதியம் குறைக்கப்படும் - ஃபேஸ்புக் சிஇஓ!