கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து எட்டாயிரத்து 953 ஆகும். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 387ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 95 ஆயிரத்து 880ஆகவும் உள்ளது.
குணமடைந்தோருக்கும் சிகிச்சைப் பெற்று வருவோருக்கும் இடையிலான வித்தியாசம் ஒரு லட்சமாக உள்ளது. சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் சதவிகிதம் 58.13 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் சதவிகிதம் மாநிலம் வாரியாக (முதல் 15 மாநிலங்கள்): மேகாலயா - 89.1%, ராஜஸ்தான் - 78.8%, திரிபுரா - 78.6%, சண்டிகர் - 77.8%, மத்திர பிரதேசம் - 76.4%, பீகார் - 75.6%, அந்தமான் & நிகோபார் - 72.9%, குஜராத் - 72.8%, ஜார்க்கண்ட் - 70.9%, சட்டீஸ்கர் - 70.5%, ஒடிசா - 69.5%, உத்தரகாண்ட் - 65.9%, பஞ்சாப் - 65.7%, உத்தர பிரதேசம் - 65%, மேற்கு வங்கம் - 65%
இந்தியாவில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக மொத்தம் 1026 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் அரசு ஆய்வு மையங்கள் மொத்தம் 741, தனியார் ஆய்வு மையங்கள் மொத்தம் 285. இவற்றில் கடைசி 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 479 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக இந்தியாவில் 79 லட்சத்து 96 ஆயிரத்து 707 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இதுவரை இல்லாத அளவாக தமிழ்நாட்டில் கரோனாவுக்கு 68 பேர் உயிரிழப்பு!