ETV Bharat / bharat

இந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியம் - தமிழிசை

புதுச்சேரி: மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.

Reconstruction of Indian history is essential - tamilisai soundararajan

author img

By

Published : Feb 27, 2020, 7:24 PM IST

இந்தியா-தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார்ந்த பழைய சகோதரத்துவத்தை நினைவூட்டும் விதமாக இந்தியா கடல் 2020 என்ற பெயரில் சர்வதேச கருத்தரங்கு புதுச்சேரியில் இன்று தொடங்கியது.

இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய அவர், “இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கலாசார வர்த்தகத் தொடர்புகள் பழங்காலம் தொட்டே இருந்து வந்தது. ஆனால் வரலாறு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதனால் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியம்" என்றார்.

மேலும் "தமிழ்நாட்டிலும் தவறான தகவல் தொடர்பு காரணமாக வரலாறு தவறாகச் சித்திரிக்கப்பட்டு உள்ளது. கடல் கடந்து தமிழர் பெருமை சென்றதன் சான்றாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயருடன் சிலை வைக்கப்பட்டுள்ளதே சான்று" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார், ஓய்வுபெற்ற கடற்படை அலுவலர் சுனில் லன்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க...மதுரை - டு - சிங்கப்பூர்: பறக்கத் தயாராகும் ஜில் ஜில் ஜிகர்தண்டா... #Exclusive

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.