அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், கரோனாவிலிருந்து நாம் மீள ஒரு ஆன்மிக முயற்சியை மேற்கொள்வோம் என பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் பதிவிட்ட ட்வீட்டில், "ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை இந்துக்கள் அனுமனைத் தினந்தோறும் ஐந்து முறை வணங்க வேண்டும். ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமருக்குப் பூஜை செய்து, இந்த ஆன்மிக முயற்சியை முடித்துக்கொள்ளுவோம்.
பாஜக அரசு மத்தியப் பிரதேசத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும், ஊரடங்கு ஆகஸ்ட் 4ஆம் தேதியோடு முடிவுக்குவருகிறது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை நாம் தீபாவளியைப் போல் கொண்டாடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அனுமனை வணங்கினால் நாம் கரோனாவிலிருந்து விடுபடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை குறித்து யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயம்!