2011ஆம் ஆண்டில் கான்டேஜியன்(Contagion) என்ற திரைப்படம், கறுப்பு நிறத்தில், கடடுமுரடான குரலில் ஒரு இருமல் சப்தத்துடன் தொடங்கும். அந்தப் படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருந்தபோது, இயக்குனர் ஸ்டீவன் சோடெர்பெர்க்கின் கற்பனைக் காட்சிகள் அதன் போக்கை சரியாக கொண்டு சென்றது. அந்தப் படம் ஆட்கொல்லி வைரஸ் அதன் பரிணாம வளர்ச்சியால் மக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பேசும்.
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படம் வெளியானது. இந்தப் படம் முழுக்க முழுக்க பயோவார் என்னும் உயிரி தொழில்நுட்ப போர் குறித்து பேசும். இத்திரைப்படத்தில் சீனாவில் இருந்து வெளிப்படும் வைரஸ் ஒன்று தொடுதல் மூலம் அனைவருக்கும் பரவுவது அதன் காரணமாக ஏற்படும் தொற்றுநோய் பாதிப்புகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
விமான நிலையங்கள் ஆள் நடமாட்டமின்றி மயான அமைதியாக காட்சியளிக்கும். குப்பை நிறைந்த தெருக்களில் மக்கள் பீதியுடன் கடைகளில் பொருள்கள் வாங்குவார்கள். இதுபோன்ற பல காட்சிகள் இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்த கற்பனையின் பொருள் ஒரு தாயின் அரவணைப்பு நஞ்சுச்தன்மையானதாகவும், ஒரு காதலனின் முத்தம் மரணத்தை விளைவிக்கும் என்பதாகும்.
இப்போது, யாருக்கேனும் செல்போனில் தொடர்புகொண்டால் கரடுமுரடான குரலுடன் கேட்கும் இருமல் ரிங்டோன்தான் உங்களை வரவேற்கிறது. ஆலோசனை இல்லாவிட்டால் மளிகைப் பொருள்களை வாங்க மக்கள் முண்டியடித்து ஒருவர் மீது ஒருவர் விழுந்துவிடுவார்கள் என்ற நிலை உள்ளது. அந்தக் கற்பனை காட்சிகள் தற்போது நிஜமாகிவருகிறது.
ஆம், இதற்கு காரணம் தடுப்பூசியோ பிற சிகிச்சை நெறிமுறைகளோ இல்லை என்பதலே ஆகும். ஆனால் ஹாலிவுட்டைப் பொறுத்தவரை, சினிமா (ரீல்) வாழ்க்கை எப்போதும் யதார்த்தத்தை விட முன்னிலையில் உள்ளது. 1995 ஆம் ஆண்டில் வெளியான அவுட்பிரேக்(Outbreak) என்ற திரைப்படத்தில், டஸ்டின் ஹாஃப்மேன் மற்றும் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
அந்தப் படத்தின் கதை, “மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த கொடிய காய்ச்சலிலிருந்து ஒரு நகரத்தை காப்பாற்றுவது” போல் அமைக்கப்பட்டிருக்கும். இதேபோன்று காலநிலை மாற்றம் இருப்பிடத்தை தாக்கத் தொடங்கிய நேரத்தில், 2015ஆம் ஆண்டு மேட் மேக்ஸ்:: ஃபரி ரோடு (Mad Max: Fury Road) என்ற திரைப்படம் வெளியானது.
அடுத்து ஒரு தவறான அதிபரை தோலுரித்து காட்டும் வகையில், 2016ஆம் ஆண்டு மார்கரெட் அட்வூட்டின் தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல் (The Handmaid's Tale) என்ற படம் வெளியானது. இது ஹாலிவுட் படங்களின் அதீத கற்பனையை காட்டுகிறது.
அழிவை நோக்கி செல்லும் உலகில் கோமாவில் இருக்கும் மனிதரான சிலியன் மர்பி ஒரு கோபத்தை தூண்டும் வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் எழுந்திருக்கிறார். 2002ல் வெளியான இந்த 28 டேஸ் லேட்டர்ஸ், (28 Days Later's) நாளைய மனிதநேயமற்ற உலகில் ஏற்படும் அதிகப்படியான கோபத்தை மையமாக கொண்ட படம்.
குருட்டுத்தன்மைக்கு பின்னால் இருக்கும் கோபத்தை காட்டும் வகையில், ஜோஸ் சரமகோவின் அற்புதமான நாவலை அடிப்படையாகக் கொண்ட பார்வையிழப்பை ஏற்படுத்தும் வைரஸால் பாதிக்கப்பட்ட உலகை பற்றிய படம் பிளைண்டுநெஸ் (Blindness in 2008). இங்கேயும், பெண்கள் பாலினத்தின் இறுதி தியாகத்தை செய்ய வேண்டும். ஆம் அதேதான்..
மிகச்சிறந்த நட்சத்திரங்களைக் கொண்ட மலையாள திரைப்படமான ஆஷிக் அபுவின் வைரஸ் (2019), 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட நிபா வைரஸ் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரபரப்பான மருத்துவ த்ரில்லர் திரைப்படம் இதை துல்லியமாக காட்டுகிறது.
கடந்த ஆண்டு நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் மினி-சீரிஸ் லெய்லாவின் படைப்பாக்க இயக்குநரான தீபா மேத்தா விளம்பரப்படுத்தியபோது, 'நாங்கள் அனைவரும் இப்போது ஷாலினிதான்' என்று கூறினார்.
இந்தப் படம் ரயாக் அக்பரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாறுபட்ட பயமுறுத்தும் சமூக சூழல். இது மிகவும் உண்மையானது. இது இயற்கையின் மீதான போரை பெண்கள் கருப்பைகள் மீதான போருடன் கலக்கிறது.
உலகளவில் ஹாலிவுட்டுக்கு 42 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது. அதில் 30 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானம் அமெரிக்காவிற்கு வெளியிலிருந்து வருகிறது. இது அமெரிக்காவை உண்மையான சர்வதேச வல்லரசாக மாற்றுகிறது என்பதில் ஆச்சரியமில்லை. சமீப காலங்களில் மனிதநேயம் மிக மோசமான நிலையில் உள்ளது.
இரக்கமற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், சாதி, மதம் என தங்கள் அடையாளங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் மக்கள் மற்றும் ஒவ்வொரு மனிதனும் பகிர்ந்து கொள்ளும் சமூகங்களிலிருந்து தன்னலத்துடன் தனித்து பின்வாங்குகின்றனர்.
இதனால் திரைப்பட வில்லன்களும் கூட பெரிய அளவில் மாற்றியமைப்படுகின்றனர்.
போர்களை ஏற்படுத்திய பெரிய அரசாங்கங்களிலிருந்தும், மரணத்தை ஏற்படுத்திய பயங்கரவாத அமைப்புகளிடமிருந்தும், திரைப்படங்கள் கூட மிகப்பெரிய அச்சங்கள் நமக்குள்ளேயே இருப்பதைக் கண்டறிந்துள்ளன.
ஆனால், தொற்றுநோய் குறித்த திரைப்படங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக காட்டுகிறது. தொற்றுநோய் நம்மை ஒருவருக்கொருவர் எதிரிகளாக்குகிறது. ஆனால் கவனமான சமூக இடைவெளி நம்மை ஒன்றிணைக்கிறது.
கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் யாராலும் தனித்து போரிட முடியாது. இதற்கு ஒருங்கிணைப்பான குழு ஒத்துழைப்பு அவசியம். இவை இல்லையென்றால் போரிடுவதில் அர்த்தமில்லை.
நோய் குணப்படுத்தப்பட்டாலும், மக்கள் பட்டினியால் இறந்துவிட்டால், அது மனித குலத்தின் வெற்றி அல்ல. ஆனால் இவை அனைத்தையும் தோற்கடிப்பதுதான் உன்னதமான, மனிதாபிமானமான ஒன்று.
இந்தியாவின் புகழ்பெற்ற வைராலஜிஸ்டுகளில் ஒருவரான ஷாஹித் ஜமீல் கூறுவது போல், 'இந்த வைரஸ் பணக்காரர்களையும் ஏழைகளையும், அரச குடும்பம் மற்றும் சாதாரண மக்களையும் ஒரே மாதிரியாக தாக்கும். இது ஒரு சிறந்த சமநிலையான ஒன்று. இது மதம், சாதி, பொருளாதார நிலை, பாலினம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. இவற்றின் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டாது.'
உண்மையில், இந்த உலகம் ஒருபோதும் மாறாது. ஆயினும் பிரபஞ்சத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது.