பீகாரில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் பாட்னா, இந்த வெள்ளத்தால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக ஒரே வாரத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் பீகாருக்கு விரைந்துள்ளனர். இதுவரை 4,000 பேர் பாட்னாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி, "வெள்ள பாதிப்புகள் தொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தொடர்புகொண்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது" என்று ட்வீ்ட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: மிரட்டும் மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிகார்!