ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், 'கரோனா பரிசோதனையில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நோயின் அறிகுறிகள் எதுவும் பெரிதளவில் இல்லாததால் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மேலும், இங்கிருந்தே என் பணிகளைத் தொடர உள்ளேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், என்னை அண்மை நாட்களில் சந்தித்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காணொலி காட்சி, தொலைபேசி மூலம் தொடர்ந்து இணைப்பில் இருப்போம் எனவும் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து இன்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வீட்டில் தனிமையிலிருந்து வேலையை தொடர்கிறார். அதுமட்டுமின்றி தொடர்ந்து அனைத்து அலுவலர்களுடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பில் உள்ளதால், மத்திய வங்கி செயல்ப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க...இந்தியாவில் 79 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!