இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் பேசுகையில், 'ரிசர்வ் வங்கி உத்தரவின் படி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கிகள் இயக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் தவறு. இது தொடர்பாக ரிசா்வ் வங்கி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக சமூக வலைத்தளங்களில், வரும் ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து வங்கிகள் சனிக்கிழமைகளில் மூடப்படும் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.