ETV Bharat / bharat

குமாரசாமி மகன் திருமணத்திற்கு ரவீணா எதிர்ப்பு

author img

By

Published : Apr 18, 2020, 10:05 AM IST

மும்பை: ஊரடங்கின்போது நடைபெற்ற கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மகன் நிகிலின் திருமண நிகழ்வை நடிகை ரவீணா டாண்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Raveena Tandon latest news
Raveena Tandon latest news

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூருவுக்கு அருகேயுள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குமாரசாமியின் மகன் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. மேலும், சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், பலதரப்பட்ட மக்களுக்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த சூழலில், நடிகை ரவீணா டாண்டனும் தனது எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கெட்ட ஆத்மாக்கள் எப்போதும் அறியாது. நாட்டு மக்கள் எம்மாதிரியான இன்னல்களை சந்திக்கின்றனர். உணவுக்காக யாரெல்லாம் அல்லல்படுகின்றனர். பிறருக்கு யாரெல்லாம் இம்மாதிரியான சூழல்களில் உதவுகின்றனர்” என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.