ETV Bharat / bharat

அரியவகை பனிச்சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு - உத்ரகாண்ட் செய்திகள்

உத்ரகாண்ட்: கரோனா ஊரங்கைத் தொடர்ந்து, கங்கோத்ரி தேசியப் பூங்காவில் அரியவகை விலங்குகளான பனிச்சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

பனிச்சிறுத்தைகள்
பனிச்சிறுத்தைகள்
author img

By

Published : Sep 21, 2020, 8:56 PM IST

கரோனா பொதுமுடக்கத்தின் நேர்மறை விளைவுகளில் ஒன்றாக, இயற்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் செழித்துக் காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ​உத்தரகாண்ட் மாநிலம், கங்கோத்ரி தேசியப் பூங்காவில் தற்போது பனிச்சிறுத்தைகள் அடிக்கடி தென்பட்டுவருகின்றன.

அரிதான மற்றும் ஆபத்தான காட்டு விலங்குகளில் ஒன்றான பனிச்சிறுத்தை, கடந்த மாதம் முதல் இங்குள்ள கங்கோத்ரி தேசியப் பூங்காவில் பலமுறை தென்பட்டுவருகிறது என விஞ்ஞானி ஷம்பு பிரசாத் நவுதியால் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பனிச்சிறுத்தைகள் பாதுகாப்பு மையம் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்தில்தான் உருவாக்கப்பட்டது. மேலும் ஆபத்தான வனவிலங்குகளான வூலி பறக்கும் அணில், யூரேசியன் லினக்ஸ் எனப்படும் காட்டுப் பூனைகள், காட்டு நாய்கள் ஆகியவையும் இம்மாநிலத்தில் அடிக்கடி தென்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தேசியப் பறவையின் அழகில் சாந்தமான தேசிய விலங்கு - வைரல் புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.