ஒடிசா மாநிலம் கேந்திரபாதா மாவட்டத்தில் உள்ள ராஜ்கனிகா கிராமத்தில் ஒரு அரிய வகை கட்டுவிரியன் பாம்பு இன்று (ஆகஸ்ட் 24) மீட்கப்பட்டுள்ளது. பொதுவாக கட்டுவிரியன் கருப்பு நிறத்திலே இருக்கும். ஆனால், அப்பகுதியில் மீட்கப்பட்ட கட்டுவிரியன் வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது.
பாம்பை உள்ளூர்வாசிகள் முதலில் பார்த்துள்ளனர். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால், பாம்புகளைப் பிடிக்கும் உதவி எண்ணுக்கு கிராமவாசிகள் தகவல் அளித்துள்ளனர். மரபணு கோளாறு காரணமாக, பாம்பு மாறுபட்ட நிறத்தில் இருப்பதாக பாம்பு பிடிக்கும் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 6 அடி நீள சாரைப் பாம்புகளை அசால்ட்டாக பிடித்த 'பாம்பு பாண்டியன்'