பல்லியா (உத்தரப் பிரதேசம்): பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளை கண்ணியமாக இருக்க அறிவுறுத்தினால், பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறையும் என பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர சிங் கருத்து தெரிவித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'பாலியல் வன்புணர்வு போன்ற சம்பவங்களை நல்ல வளர்ப்பினால் மட்டுமே தடுக்க முடியும். அரசினாலும் அதிகாரத்தினாலும் மட்டுமே இதனை மாற்றமுடியாது. அனைத்து பெற்றோர்களும் தங்களது பெண் குழந்தைகளுக்கு கண்ணியத்தையும் கலாசார சூழலையும் பயிற்றுவிக்க வேண்டும்' என உத்தரப்பிரதேச மாநில பல்லியா தொகுதி எம்.எல்.ஏ சுரேந்தர சிங், ஹத்ராஸ் வன்புணர்வு சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். இக்கருத்தினால் பல்வேறு தரப்பினரும் சுரேந்தர சிங்கை சாடி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு டெல்லி சஃப்டர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இவ்விவகாரத்தில் மூன்று நபர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி திரும்ப வரப்போவதில்லை... இவ்விவகாரத்தை விடுங்கள் - பாஜக எம்.பி.,யின் ஆணவப் பேச்சு!