ETV Bharat / bharat

புதுச்சேரியின் புதிய காவல் துறைத் தலைவராக ரன்வீர்சிங் கிருஷ்ணியா பதவியேற்பு - new DGP of Puducherry

புதுச்சேரி மாநிலத்தின் புதிய காவல் துறைத் தலைவராக ரன்வீர்சிங் கிருஷ்ணியா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

Ranveer Singh Krishnia
ரன்வீர்சிங் கிருஷ்ணியா
author img

By

Published : Jan 11, 2021, 5:02 PM IST

புதுச்சேரி மாநில காவல் துறைத் தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாலாஜி ஸ்ரீவத்சவா செயல்பட்டுவந்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி உள் துறை அமைச்சகம், டெல்லியில் பணியாற்றிவந்த ரன்வீர்சிங் கிருஷ்ணியாவை புதுச்சேரி மாநிலத்தின் புதிய காவல் துறைத் தலைவராக நியமித்து உத்தரவிட்டது.

அதனடிப்படையில், அவர் இன்று புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் காவல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவரிடம் முன்னாள் காவல் துறைத் தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவா பொறுப்புகளை ஒப்படைத்தார். இதற்கிடையில், அவருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.