ஜார்க்கண்ட் மாநிலம் நாம்கூமில் தொழிலதிபர் ஒருவர் மீது நக்சலைட்டைச் சேர்ந்த ஆறு பேர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், தொழிலதிபரை தாக்க தயாராக இருந்த ஆறு நக்சல்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும், இந்த நக்சல்களுக்கு பி.எல்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த சுப்ரீமோ தினேஷ் கோப் என்பருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து பெரிய அளவிலான ஆயுதங்கள், தோட்டாக்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.