டெல்லி தவிர மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக தலைநகருக்கு சிகிச்சைக்கு வரத் தொடங்கினால் ஜூலை 31ஆம் தேதிக்குள் 1.5 லட்சம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தேவைப்படும் என்று மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி துணை நிலை ஆளுநர், “டெல்லி அரசாங்கம் படுக்கை வசதி சிகிச்சைகள் மற்றும் மருத்துவ வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் தற்போதுவரை 242 கட்டுப்பாட்டு மண்டலங்கள் செயல்படுகிறது. அதிகம் ஆபத்துக்குள்ளான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
மாவட்டம் வாரியாக தொற்று பாதித்தோர் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து ஒவ்வொரு வீட்டையும் கண்காணிக்கவேண்டும்” என கூறியுள்ளார்.
இதையடுத்து ஆளுநர், சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மூத்த சுகாதார அலுவலர்கள் ஆகியோருடன் பேசினார்.
அப்போது, “தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதுவரை டெல்லியில் 34,867 பேர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதில், 12,731 பேர் குணமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அதிமுகவினர்
!