நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்தக் கல்வி கொள்கையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், இதிலுள்ள மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக் கொள்கை குறித்து நேற்று (ஆகஸ்ட் 01) நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, "இந்தியாவில் கல்வி தரத்தை மேம்படுத்தவும், கல்வி அமைப்பை உலக தரத்தில் நவீனமயமாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, கற்றல் ஆகியவைக்கு இந்தக் காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
மோடியின் உரையை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழில் யூடிப்பில் வெளியிட்டிருந்தார். அதை ரீட்வீட் செய்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், "பொன். ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.
-
பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். https://t.co/YtiRZXtCpf
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். https://t.co/YtiRZXtCpf
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 2, 2020பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். https://t.co/YtiRZXtCpf
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 2, 2020
மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: மனித வாழ்வில் கரோனாவின் தாக்கம்: மனித உரிமை ஆணையம் மூன்றாம் கட்ட ஆலோசனை!